தைஃப் கவர்னரேட்டை அல்-பஹா பகுதிகளுடன் இணைக்கும் சாலையில் கார் விபத்துக்குள்ளானதில் ,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 உடன்பிறப்புகளின் மரணத்திற்கு வழிவகுத்து மேலும் அவர்களின் பெற்றோர் மற்றும் 3 உடன்பிறப்புகளின் மோசமான நிலை காரணமாகத் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய இரண்டாவது காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மரணமடைந்தார், அதே நேரத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிர் பிழைத்துக் காயமின்றி விபத்தில் இருந்து வெளியேறினார்.
முகமது சலேம் அல்-காம்டி தனது சகோதரர் அகமதுவின் குடும்பத்தினர் மதீனாவிலிருந்து அல்-பஹாவுக்குத் திரும்பும் போது, பயங்கரமான விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
பெற்றோர் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை, மற்றும் கிங் அப்துல்அஜிஸ் சிறப்பு மருத்துவமனை மற்றும் தைஃபில் உள்ள பிரின்ஸ் சுல்தான் மருத்துவமனை ஆகியவற்றில் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு, பெற்றோர்கள் உடல்நிலை முன்னேறித் தீவிர சிகிச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் 6 குழந்தைகளின் இறுதி பிரார்த்தனை அசர் தொழுகைக்குப் பிறகு வழங்கப்பட்டு, தைஃப் கவர்னரேட்டில் அடக்கம் செய்யப்பட்டதாக அல்-காம்டி கூறினார்.