93வது சவூதி தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் சவூதி அரேபியா முழுவதும் 13 நகரங்களில் விமானப்படை காட்சிகள் நடைபெறு இருக்கிறது.மேலும் பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது.
தலைநகர் ரியாத்தில், செப்டம்பர் 22 மற்றும் 23, ஜித்தாவில் செப்டம்பர் 17 முதல் 20, அல்-கோபரில் செப்டம்பர் 18 முதல் 19, மற்றும் செப்டம்பர் 26 முதல் 27, தம்மாமில் செப்டம்பர் 18 மற்றும் 19, ஜுபைலில் செப்டம்பர் 18 மற்றும் 19, ஹஃபர் அல்-பாதினில் செப்டம்பர் 30 ஆம் தேதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கமிஸ் முசைத், கிங் காலித் விமான தளம் ஆகிய இடங்களில் செப். 22 மற்றும் 23 தேதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும். தபூக்கின் குடியிருப்பாளர்கள் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.
கொண்டாட்டங்கள் இளவரசர் முகமது பின் சவுத் பூங்காவில் உள்ள அல்-பஹாவிலும், ரகாதான் வனப் பூங்காவிலும், பிரின்ஸ் ஹோசம் பின் சவுத் பூங்காவிலும் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறும். கொண்டாட்டத்தில் கடற்படை அணிவகுப்பும் ராயல் சவூதி கடற்படையின் பங்கேற்பும் இருக்கும். மேலும் ராணுவ அணிவகுப்பு, பைக்கர் அணிவகுப்பு மற்றும் ஆயுத கண்காட்சி ஆகியவை நிகழ்ச்சிகளில் அடங்கும்.