துபாயின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் மல்லபுரம் பகுதியைச்சேர்ந்த 38 வயதான கலங்கந்தன் ரிஜேஷ் மற்றும் 32 வயதான அவர் மனைவி ஜிஷி ஆகியோர் இந்த தீ விபத்தில் எழுந்த புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இதர 14 பேர் சூடான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.மீட்புப் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவரும் பலியானார், மின்கசிவு தீ விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
ரிஜேஷ்-ஜிஷி ஆகிய இருவரின் உடல்களையும் நாளை கேரளா கொண்டு வர இந்தியத் தூதரகம் மூலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.