தாயிஃப் கவர்னரேட்டில், போக்குவரத்து பொது ஆணையத்தின் செயல் தலைவர் Dr. Rumaih Al-Rumaih, தாயிஃப் மேயர் நாசர் அல்-ரெஹைலி மற்றும் SAPTCO நிறுவனத்தின் பொது போக்குவரத்து CEO Turki Al-Subaihi முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பொது பேருந்து போக்குவரத்து சேவை திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தாயிஃப் கவர்னர் இளவரசர் சவுத் பின் நஹர்.
கவர்னரேட்டில் உள்ள மிக முக்கியமான மையங்கள் மற்றும் அடையாளங்களை இணைக்கும் ஒன்பது முக்கிய தடங்கள் மூலம் ஆண்டுதோறும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இத்திட்டம் சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 182 பேருந்து நிறுத்தப் புள்ளிகளில் 58 பேருந்துகள் என ஒரு நாளைக்கு 18 மணிநேரம் இயக்கப்படும், மேலும் போக்குவரத்து பாதுகாப்பின் அளவை மேம்படுத்தி, சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து கார்பன் வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு வழிவகுக்கும்.
இயக்க நிறுவனமான SAPTCO, Taif Buses அப்ளிகேஷன் (TAIF BUSES) மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகவும் வசதியாகவும் சேவையை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் மின்னணு பயன்பாட்டையும் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பொதுப் பேருந்து போக்குவரத்துத் திட்டத்தில் காத்திருப்பு நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ஒவ்வொரு நிலையத்திலும் காத்திருக்கும் பயணிகளுக்கான இருக்கைகள், சைன் போர்டு, பயணிகள் காத்திருக்கும் இடம், பேருந்து நிறுத்தும் இடங்கள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் பாதைகள் ஆகியவை அடங்கும்.