Home சவூதி அரேபியா வழிகாட்டி தாமதமான சம்பள பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகள்.

தாமதமான சம்பள பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகள்.

510
0

பல வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் சம்பள தேதிக்கு முன் அவர்களின் முதலாளிகள் சம்பளம் வழங்காததால் தாமதமான சம்பள பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
சவூதி அரேபியாவில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய பாதுகாப்பு முறையின் கீழ் ஒரு முதலாளி பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.

தொழிலாளி தனது சம்பளத்தை சரியான நேரத்தில் பெற உரிமை உண்டு.அதன்படி சம்பளம் ஒரு மாதம் தாமதமானால் காத்திருக்கலாம்,2 மாதங்கள் தாமதமானால் வேலை தேடலாம், சம்பளம் 3 மாதங்கள் தாமதமானால், நீங்கள் முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் இகாமாவை மாற்ற அனுமதிக்கப்படுவீர்கள்.

மேலும் சம்பளம் 3 மாதங்களுக்கும் மேலாகத் தாமதமாக இருந்தால், QIWA மூலம் வேலையை மாற்றவும், இடமாற்றம் முடிந்ததும், சவுதி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, செலுத்தப்படாத சம்பளம் மற்றும் சேவையின் இறுதிகால பலன்களை மீட்டெடுக்கலாம். உங்கள் வருகைப் பதிவேடுகளின் ஆதாரத்தை மின்னணு வடிவிலோ அல்லது பிரதிகளிலோ வைத்திருப்பது அவசியம். ஏனெனில் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படாத காலத்திற்கு நீங்கள் ஆஜராகியுள்ளீர்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க இது உதவும்.

ஒரு முதலாளி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் சம்பளம் கொடுக்கத் தவறினால், ஒவ்வொரு ஊழியருக்கும் பகரமாகச் சவூதி ரியால் 3,000 அபராதமாகவும், தொடர்ச்சியாக 2 மாதங்கள் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், MOL ஆன்லைன் சேவைகளை நிறுத்துவது போன்ற கடுமையான அபராதங்களை சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!