சவூதி மத்திய வங்கியின் (SAMA) ஆளுநர் அய்மன் அல்-சயாரியின் மேற்பார்வையின் கீழ் செப்டம்பர் 4 முதல் 5 வரை ரியாத்தில் “Seamless Saudi Arabia 2023” மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற இருக்கிறது.
“சவூதி அரேபியா முழுவதும் பணம் செலுத்துதல், ஃபின்டெக் மற்றும் வங்கியின் எதிர்காலம்” என்ற கருப்பொருளின் கீழ், மாநாட்டில் 450 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறவனங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றன.
இந்த மாநாட்டில் சவூதி பேமெண்ட்ஸ் பங்கேற்கும். இது சமீபத்திய டிஜிட்டல் சேவைகளைக் காட்சிப்படுத்த ஒரு சிறப்பு பெவிலியனுடன் தேசிய சுற்றுச்சூழல் அமைப்புக்குத் தீர்வுகளை வழங்கும். அதன் தலைவர்கள் உரையாடல் அமர்வுகளில் முக்கிய பேச்சாளர்களாகப் பங்கேற்பார்கள்.