இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது பறக்கும் டாக்சிகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் சேவைகளால் பயணிகள் பயனடைவார்கள் என்று சவூதி போக்குவரத்து மற்றும் தளவாட அமைச்சர் சலே அல்-ஜாசர், மதீனாவில் உள்ள இளவரசர் முஹம்மது பின் அப்துல் அசிஸ் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் முதல் தொகுதியைப் பெற்ற பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சவூதி அரேபிய ஏர்லைன்ஸ், ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையம் மற்றும் மக்காவில் உள்ள ஹோட்டல்களுக்கு இடையே பறக்கும் டாக்சிகளை இயக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. சவூதியா இந்தச் சேவையை இயக்கச் சுமார் 100 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
ஜித்தா விமான நிலையம் மற்றும் கிராண்ட் மசூதி அருகில் உள்ள மக்கா ஹோட்டல்களில் உள்ள விமான ஓடுபாதைகளுக்கு இடையே 100 லிலியம் ஜெட் விமானங்கள், German electric vertical take-off and landing (eVTOL) விமானங்களை வாங்குவதற்கு சவூதியா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளதாகச் சவூதியா குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ஷஹ்ரானி கூறினார்.





