தனியார் துறை மற்றும் லாப நோக்கற்ற துறைகளுக்கு ஈத் அல்-பித்ர் விடுமுறை
4நாட்கள் என்றும்,ரம்ஜான் பிறை 29க்கு இணையான ஏப்ரல் 20வியாழன் அன்று வேலை நாளின் முடிவில் விடுமுறை தொடங்கும் என்றும் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) தெரிவித்துள்ளது. தொழிலாளர் சட்டத்தின் நிறைவேற்று ஒழுங்குமுறையின் பிரிவு 24ஐ முதலாளிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது