அரசு மற்றும் தனியார் துறை அமைப்புகளின் தரவு ஒழுங்குமுறை வரைவுகள் தொடர்பான தங்கள் கருத்துக்களை ஜூலை மாத இறுதிக்குள் பொதுமக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) அழைப்பு விடுத்துள்ளது. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் (PDPL) நிர்வாக ஒழுங்குமுறை மற்றும் நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு வெளியே தனிப்பட்ட தரவை மாற்றுவதற்கான ஒழுங்குமுறை குறித்த கருத்துக்களை வெளிப்படுத்த SDAIA அழைப்பு விடுத்துள்ளது.
PDPL சட்டம் தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகளைத் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இது தனிநபர் தரவு தொடர்பான சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் கடமைகளைப் புரிந்துகொள்வதற்கும் உதவுகிறது. நாட்டிற்கு வெளியே தனிப்பட்ட தரவுப் பரிமாற்றம் தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகளை வரையறுப்பதை இரண்டாம் ஒழுங்குமுறைநோக்கமாகக் கொண்டுள்ளது.
PDPL, தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு உரிமைகளைப் பயன்படுத்தப் பங்களிக்கிறது. சவூதி விஷன் 2030 இன் நோக்கங்களை அடைய முக்கிய தூணாக இருக்கும் டிஜிட்டல் உருமாற்ற செயல்முறையை ஆதரிக்கிறது மற்றும் இது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறது.