பொது சுகாதாரம் தொடர்பாகக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட தனிநபர்களால் செய்யப்படும் பொது சுகாதார மீறல்களை நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அக்டோபர் 15, ஞாயிற்றுக்கிழமை முதல், 100 ரியால் முதல் 1000 ரியால் வரையிலான அபராதங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை நடைமுறைப்படுத்தப்படும்.
விதிமீறல்களில் சுகாதாரக் கொள்கலன்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள வேலிகளைச் சேதப்படுத்துவதும் அடங்கும். மீறுபவர்களுக்கு 1000 ரியால்கள் அபராதத்துடன், சேத மதிப்புக்கான இழப்பீடும் விதிக்கப்படும்.மீண்டும் மீறினால் இரட்டை அபராதம் விதிக்கப்படும்.
சுகாதாரக் கொள்கலன்களின் இருப்பிடங்களை மாற்றுவது அல்லது குறிப்பிட்ட நோக்கத்திற்கு அல்லாமல் அவற்றைப் பயன்படுத்தினால், சேதத்தின் மதிப்புடன் இழப்பீடு மற்றும் 500 ரியால்கள் அபராதம் விதிக்கப்படும்.