சவூதியின் பொருளாதார வலிமையை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன், iHerb மற்றும் CJ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தங்கள் தலைமையகத்தை ரியாத்துக்கு மாற்றியுள்ளது.
அப்துல் அசிஸ் அல்-டுவைலேஜ் சிவில் ஏவியேஷன் பொது ஆணையத்தின் (ஜிஏசிஏ) தலைவர், சிஜே லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு தனது வணிகத்தை நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான உரிமத்தை பல்வேறு நிறுவனத்தைச் சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கினார்.மேலும் இ-காமர்ஸ் கவுன்சிலின் பங்கை அல்-கசாபி பாராட்டி, இது மற்ற முயற்சிகள் மற்றும் சாதனைகளுக்கு வழி வகுக்கிறது என்று கூறினார்.
GACA தலைவர் அல்-டுவைலெஜ், சவூதி விஷன் 2030 இன் கட்டமைப்பிற்குள் விமானத் துறை உலகளாவிய தளவாட மையமாக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
சவூதியில் உள்ள இ-காமர்ஸ் சந்தை, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சந்தைகளை இணைக்கும் புவியியல் இருப்பிடத்துடன் வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாகும் என CJ லாஜிஸ்டிக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சின் ஹோ காங் கூறியுள்ளார். CJ லாஜிஸ்டிக்ஸ் தென் கொரியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பார்சல் டெலிவரி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.