சவூதியில் உள்ள சமூகப் பொருளாதார நிலப்பரப்பைப் பற்றிய சிறந்த புரிதலைப் பயனர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் டேட்டா சவுதி இயங்குதளத்தின் பீட்டா வெளியீட்டை அறிவித்துள்ளது பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம் (MEP). மேலும் தளமானது நம்பகமான உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதாரங்களில் இருந்து தரவைச் சேகரிக்கிறது.
பல்வேறு பொருளாதாரத் துறைகளின் மட்டத்தில் தரவுகளின் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம், வரவிருக்கும் கட்டங்களில் தளம் வழங்கும் சேவைகளை மேம்படுத்த அமைச்சகம் எதிர்நோக்கியிள்ளது.
மேலும் மேம்பட்ட காட்சி மற்றும் ஊடக நுட்பங்களைப் பயன்படுத்தி தரவைக் காண்பிக்கவும், ஆர்வமுள்ளவர்களுக்குப் பகுப்பாய்வு விளக்கங்களை உள்ளடக்கிய கால இடைவெளியில் தகுந்த தகவல்களை வெளியிடவும் இது செயல்படுகிறது.
https://datasaudi.mep.gov.sa/ என்ற இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் தளத்தை முயற்சிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.