புனித மக்கா நகரில் பொது டாக்சிகளுக்கு உரிமம் வழங்கவும், தனியார் வாகனங்களை டாக்சிகளாக மாற்றவும் பெறும் விண்ணப்பங்களைப் போக்குவரத்து அமைச்சகம் நிறுத்தியுள்ளது.
அமைச்சகத்தின் முடிவு வெளியிடுவதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக விலக்கு அளிக்கப்படும் எனப் போக்குவரத்து மற்றும் தளவாடத்துறை அமைச்சர் இன்ஜி சலே அல்-ஜாசர் கூறியுள்ளார்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த நாட்களிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தனியார் டாக்ஸி நிறுவனங்களால் விண்ணப்ப நடைமுறைகள், விதிமுறைகள் , நிபந்தனைகள் முடிக்கப்படும். சவூதி அரேபியாவின் பொதுப் போக்குவரத்துச் சட்டம், பொது டாக்சிகள், டாக்சி-கேப் தரகர்கள் , வாகனங்களின் கட்டணத்தை நிர்வகிக்கும் விதிமுறைகளை மதிப்பாய்வு செய்கிறது.