கோடையின் உச்சத்தில் தமிழ் மக்கள் கூடும் கொண்டாட்டமாகச் சவூதி தமிழ் கலாச்சார மையம் மற்றும் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் கோடையில் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஜூன் 17 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஜெத்தாவில் நடைபெற இருக்கின்றது.
தமிழ் ஆளுமை பேராசிரியை டாக்டர் பர்வீன் சுல்தானா அவர்களின் சிறப்பு வருகையுடன்…
*Universal Inspection நிறுவனம் இணைந்து வழங்கும் கோடையில் ஒரு கொண்டாட்டம் Faisaliah வில் உள்ள அரப் ஹால் எனும் திருமண ஹாலில் முற்றிலும் மாறுபட்டபொழுது போக்கு நிகழ்ச்சியாக நடைபெற இருக்கின்றது.
ஜெத்தா டான்ஸ் கிளப் இன் நடனக் கலைஞர்கள் நடனமாடி மகிழ்விக்க இருக்கின்றனர். மேலும் ஜெத்தா புகழ் மிர்ஜா செரீஃப், சோஃபியா, டார்டர் மிர்ஜானா உள்ள்ளிட்ட உள்ளூர் பாடகர்கள் தமிழ் பாடல்களைப் பாடி மகிழ்விக்க இருப்பதாகவும்
இது நம்ம ஊரு திருவிழா… தமிழ் மக்களுக்கான பெருவிழா… அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொள்ளுங்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு கொடுத்துள்ளனர்.
சவூதி தமிழ் மீடியா இணைந்து செயல்படும் இந்நிகழ்ச்சியினை Merryland Event Management அரசின் அனுமதிகள் பெற்றுத் தந்துள்ளது.
இலவச நுழைவுச்சீட்டுகளை Universal Inspection நிறுவனம் வழங்குகின்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வருகின்ற ஜூலை மாதம் 16 வரை அஜீஜியா சதாப் தென்னிந்திய உணவகம் மற்றும் ஷரஃபியாவின் லக்கிதர்பார் உணவகங்களுக்குக் கொண்டு சென்று உணவு அருந்தினால் 10 விழுக்காடு சலுகை என்றும் அறிவித்துள்ளனர்.