Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜெட்டாவில் துவங்குகிறது மீடியா ஒயாசிஸின் இரண்டாவது பதிப்பு.

ஜெட்டாவில் துவங்குகிறது மீடியா ஒயாசிஸின் இரண்டாவது பதிப்பு.

157
0

மீடியா ஒயாசிஸின் இரண்டாவது பதிப்பு வருடாந்திர கிராண்ட் ஹஜ் சிம்போசியத்துடன் இணைந்து ஊடகத்துறை அமைச்சர் சல்மான் அல்-தோசாரியால் தொடங்கப்பட்டு ஜூன் 22, 2023 வரை ஜெட்டாவில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் தொடர்ந்தது.

இது ஊடக கவரேஜ் என்ற கருத்தை மாற்றுவதையும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஒளிபரப்பில் கொண்டு வருவதையும், தேசிய நிகழ்வுகள் மற்றும் சவூதியின் முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், புனித மக்கா மற்றும் புனித தளங்களுக்கான ராயல் கமிஷன் மற்றும் பயணிகள் சேவை திட்டம் ஆகியவற்றுடன் மூலோபாய கூட்டுறவில், இந்த ஹஜ் பருவத்தின் புதுப்பிப்புகளை உள்ளடக்கும் வகையில் ஒயாசிஸ் நடத்தப்படுகிறது.

கிராண்ட் ஹஜ் சிம்போசியத்தின் செயல்பாடுகளை ஒளிபரப்புவதற்காகத் தொலைக்காட்சி ஸ்டுடியோக்களும் வழங்கப்பட்டு, உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஊடக வல்லுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஹஜ் மெய்நிகர் பிரஸ் சென்டரில் (VPC) பயனடைய ஒயாசிஸ் அனுமதித்து, செய்தி நிகழ்வுகளைத் திருத்துவதற்கும் வெளியிடுவதற்கும் ஒயாசிஸில் 30 ஊடக வல்லுநர்கள்வரை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!