Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜூலை மாதத்தில் அப்சர் தளத்தில் 2.6 மில்லியன் மின் பரிவர்த்தனைகள் பதிவு.

ஜூலை மாதத்தில் அப்சர் தளத்தில் 2.6 மில்லியன் மின் பரிவர்த்தனைகள் பதிவு.

292
0

சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தின் மின்னணு தளமான Absher, குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக 2.6 மில்லியன் மின் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது.

குடும்பப் பதிவேடு வழங்க 11,057 மின் பரிவர்த்தனைகளும், தேசிய ஐடியைப் புதுப்பிக்க 27,505 மின் பரிவர்த்தனைகளும், ஐடியின் செல்லுபடியை சரிபார்க்க 128,255 மின் பரிவர்த்தனைகளும் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சேதமடைந்த தேசிய அடையாள அட்டைகளை மாற்றுவதற்காக 9,209 மின் பரிவர்த்தனைகளும், தொலைந்து போன தேசிய அடையாள அட்டைகளை மாற்றுவதற்காக 28,517 மின் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

பாஸ்போர்ட் பொது இயக்குநரகத்தின் (ஜவாசத்) சேவைகளைப் பொறுத்தவரை, 393,986 மின்னணு பாஸ்போர்ட்டுகள் மற்றும் 640,588 இகாமாக்கள் புதுப்பிக்கப்பட்டன. வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசாக்களை நீட்டிப்பதற்காக 58,270 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சேவைகளை மாற்றுவதற்காக 6,642 பரிவர்த்தனைகளும், முகீம் பிரிண்ட் கோரிக்கைக்காக 32,246 பரிவர்த்தனைகளும், வெளியேறும் விசாவை ரத்து செய்ய 15,047 பரிவர்த்தனைகளும், பெண் தொழிலாளர்களைப் பெறுவதற்கான அங்கீகாரத்திற்காக 2,029 பரிவர்த்தனைகளும் நடந்துள்ளன.

போக்குவரத்து இயக்குனரகத்தின் (மரூர்) சேவைகளைப் பொறுத்தவரை, வாகன உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான 108,469 பரிவர்த்தனைகளையும், வாகன பழுதுபார்ப்பு அனுமதிக்கான 86,717 கோரிக்கைகளையும், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான 66,096 பரிவர்த்தனைகளையும், ஓட்டுநர் அங்கீகாரத்திற்கான 84,347 கோரிக்கைகளையும் கையாண்டுள்ளது.

சேதமடைந்த மற்றும் தேவையற்ற வாகனங்களை அப்புறப்படுத்த 17,885 பரிவர்த்தனைகளும், வாகனங்கள் விற்பனைக்காக 13,797 பரிவர்த்தனைகளும், வாகன காப்பீட்டை மறுமதிப்பீடு செய்ய 4,881 பரிவர்த்தனைகளும், நம்பர் பிளேட்களை மாற்ற 23,327 பரிவர்த்தனைகளும் நடந்துள்ளன.

அப்ஷர் வியாபர தளமானது வாகன பழுதுபார்ப்பு வசதிகளுக்கு 99,734 அனுமதிகளையும், ஏர் ரைபிள் அனுமதிகளுக்கு 2,641 பரிவர்த்தனைகளையும், பார்வையாளர்களுக்கான ஓட்டுநர் அங்கீகாரம் தொடர்பான 5,616 பரிவர்த்தனைகளையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!