ஜூபைல் சாப்டர் குல்பர்கா வெல்ஃபேர் சொஸைட்டி நடத்திய ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஜூபைல் யூனிவர்ஸல் இன்ஸ்பெக்ஷன் நிறுவனத்தின் மேனான்மை இயக்குனரும், CEO வுமாகிய பதுருத்தீன் அப்துல் மஜீது அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
செப்டம்பர் 28 வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் cook zone உணவக ஆடிட்டோரியத்தில் நடந்த இந்தக் குல்பர்கா வெல்ஃபேர் சொஸைட்டியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாகச் சையத் நசீர் குர்ஷித் மற்றும் அம்ஜத் அலி ஆகியோரும் கலந்து கொண்டு குல்பர்கா வெல்ஃபேர் சொஸைட்டியின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினர்.
குர் ஆன் கிராத் ஓதி ஆரம்பம் செய்த நிகழ்ச்சியினை முகம்மது சஃபி தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பதுருத்தீன் அப்துல் மஜீது அவர்கள் இளைஞர்கள் வேலைத் தேடுவதைவிட பிறருக்கு வேலை கொடுக்கக் கூடிய தொழில் ஆரம்பித்துப் பிறருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க முன்வர வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் அரசு அதிகாரிகள் வர வேண்டும் என்றும் மிகவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். மேலும் குல்பர்கா சொஸைட்டியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி யூனிவர்ஸல் இன்ஸ்பெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் நினைவுப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார். அதனுடன் அவர்களின் பணிகளைப் பாராட்டிக் குல்பர்கா சொஸைட்டியின் சார்பில் நினைவு பரிசுகளையும் வழங்கினார்.
குல்பர்கா வெல்ஃபேர் சொஸைட்டி நிர்வாகிகள் பதிருத்தீன் அப்துல் மஜீது அவர்களின் சேவைகளை அங்கீகரித்தும் பாராட்டியும் நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் குல்பர்கா வெல்ஃபேர் சொஸைட்டியின் தலைவர் முகமது அப்துல் காசிம், துணைத் தலைவர் சையது அசாருதீன், செயலாளர் முகமது காஜி, இணை செயலாளர் இதாயதுல்லாஹ் கான், பொருளாளர் ஷஃபியுத்தீன், ஒருங்கிணைப்பாளர்கள் ஃபயூம் பாஷா, ரயீஜ் ரிஸ்வான் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் யூசுப் சேட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த செப்டம்பர் 25 இல் ஜூபைலில் நடந்த கால்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்று பெற்ற அலைன்ஸ் அணியினர் அந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான திரு பத்ருத்தீன் தவிர்க்க இயலாத காரணத்தினால் கலந்துகொள்ள முடியவில்லை ஆகவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்தச் சிறப்புமிகு தருணத்தில் திரு பத்ருதீன் அவர்களுக்கு நினைவுப் பரிசளித்து கைரவப்படுத்தினர்.