2023 ஜூன் மாதத்தில் சவூதி அரேபியர்கள் மற்றும் வெளிநாட்டினரின் வெளிநாட்டுப் பணம் அனுப்புவதில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
சவூதி மத்திய வங்கி (SAMA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது சவூதி குடிமக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொகை சவூதி ரியால் 6.75 பில்லியனாக இருந்து 24% குறைந்து 2023 ஜூன் மாதத்தில் SR5.16 பில்லியனாவும், சவூதியில் வசிக்கும் வெளிநாட்டினரின் பணப் பரிமாற்றங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சவூதி ரியால் 13.2 பில்லியனாக இருந்து 2023 ஜூன் மாதத்தில் 18 சதவீதம் சரிவை பதிவு செய்து சவூதி ரியால் 10.8 பில்லியனாக இருந்தது.
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜூன் மாதத்தில் வெளிநாட்டினரின் பணம், மாதாந்திர அடிப்படையில் 4% குறைந்து அதாவது சவூதி ரியால் 435 மில்லியன் குறைந்துள்ளதாக SAMA தரவு சுட்டிக்காட்டுகிறது.