ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் சவூதி அரேபியாவிற்கு வந்து கொண்டிருந்த பயணி ஒருவர் சுமார் 1.3 கிலோகிராம் ஹெராயின், 41.7 கிராம் ஓபியம் ஆகியவற்றை குடலில் மறைத்துக் கடத்த முயன்றுள்ளார். சோதனையில் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பிறகு, நாட்டில் இந்த அளவு போதைப்பொருள்களைப் பெற வேண்டியவர்களை அவர்கள் கைது செய்ய, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்துடன் (GDNC) ஒருங்கிணைத்துள்ளதாக ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்ததன் மூலம் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.