Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜித்தாவில் புதிய உயிரியல் பூங்கா அமைக்க ஆளுனரகம் திட்டம்.

ஜித்தாவில் புதிய உயிரியல் பூங்கா அமைக்க ஆளுனரகம் திட்டம்.

187
0

ஜித்தா நகரவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எதிர்காலத்தில் ஜித்தா கவர்னரேட்டில் ஒரு புதிய மிருகக்காட்சிசாலையை நிறுவ ஜித்தா ஆளுனரகம் திட்டமிட்டுள்ளதாக அல்-வதன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு புகழ்பெற்ற உயிரியல் பூங்கா மூடப்பட்டதை அடுத்து பல ஆண்டுகளாக, ஜித்தா மக்கள் புதிய உயிரியல் பூங்காவைத் திறக்கக் எதிர் நோக்கி இருக்கின்றனர்.

அல்-ரெஹாப் மாவட்டத்தில் தஹ்லியா சாலையின் முடிவில் ரிங் ரோட்டின் மேற்கே 16,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான அழகிய உயிரினங்கள் பூங்கா பல காரணங்களால் மூடப்பட்டது.

1999 இல் திறக்கப்பட்ட ஜங்கிள் லேண்ட் தீம் பார்க் இப்பகுதியில் உள்ள பிரபலமான விலங்கு பூங்காக்களில் ஒன்று, ஆனால் இந்தப் பூங்கா நகர மையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளதாகவும், குறிப்பாக வார இறுதி நாட்களில் குடும்ப பயணங்களை மேற்கொள்வது கடினம் என்றும் ஜித்தா குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இது மொத்தம் 104,413 சதுர மீட்டர் பரப்பளவில் ஜித்தா நகர மையத்திலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ள ஓஸ்ஃபான் சாலையில் உள்ள மெர்சல் கிராமத்தில் அமைந்து 1,000 வகையான காட்டு விலங்குகள் மற்றும் 200 வகையான அரிய பறவைகளைக் கொண்டு, ஒரே நேரத்தில் 15,000 பேர் வரை வரவேற்க கூடிய இந்தப் பூங்கா சவூதி அரேபியாவின் மிகப்பெரிய சாகச பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!