ஜித்தாவில் அடுத்தடுத்து 19 கார்களைத் திருடிய 15 வெளிநாட்டவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் 2 பேர் சிரியர்கள் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. விற்பதற்காகத் தயார் செய்யப்பட்ட 9 கார்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருடர்கள் கார்களைத் திருடி நகர்ப்புறங்களுக்கு வெளியே கொண்டு சென்று வாகனங்களைப் பிரித்து உதிரிபாகங்களை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர், வழக்கு பொது விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.