ஜித்தா கவர்னரேட்டில் மனால் அல்-லுஹைபியை தற்காலிக கல்வி இயக்குநராக நியமித்த முடிவை வெளியிட்டார் சவூதி அரேபிய கல்வி அமைச்சர் யூசுப் அல்-புன்யான்.
கல்வி அமைச்சர் மற்றும் மனித வளத்துறை துணை அமைச்சர் தன் மீது நம்பிக்கை வைத்ததற்காகத் தனது நன்றியைத் தெரிவித்து, கல்வி அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, கல்வியில் முன்னேற்றத்தை மேம்படுத்தவும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கல்வி மற்றும் அறிவியல் சாதனைகளைத் தொடர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அல்-லுஹைபி உறுதிப்படுத்தியுள்ளார்.
அல்-லுஹைபி ஹிஜ்ரி 1412 இல் ஜித்தாவில் உள்ள கல்வியியல் கல்லூரியில் ஷரியா அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்று ஷரியா அறிவியல் ஆசிரியர் மற்றும் தலைவர், கல்வி மேற்பார்வையாளர், மத்திய ஜித்தாவில் உள்ள கல்வி அலுவலக இயக்குனர், கல்வி விவகாரங்களுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் (பெண்கள்) மற்றும் உள் பொறுப்பாளர் (சிறுவர்கள்) எனக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பல்வேறு பதவிகளை வகித்து, இறுதியாக ஜித்தா கவர்னரேட்டில் கல்வி இயக்குநர் ஜெனரல் பதவியை வகிக்கிறார்.
ஆசிரியர், மாணவர், பாடத்திட்டம், கல்விச் சாதனைகளை மேம்படுத்துதல், பள்ளித் தலைவர்களை உருவாக்குதல், மேற்பார்வை நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மனால் அல்-லுஹைபி ஆர்வமாக உள்ளார்.அவர் அமைச்சகம் மற்றும் கல்வித் துறை மாநாடுகள் மற்றும் மன்றங்களில் பணிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்ததும், பல சர்வதேச மற்றும் உள்ளூர் பயிற்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.