ஏர் சீஷெல்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திங்கள்கிழமை ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் (கேஐஏ) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
காக்பிட்டில் புகை வாசம் வீசியதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு 8:12 மணிக்கு ஏர் சீஷெல்ஸ் விமானத்திலிருந்து (எண். SET022) விமான நிலையக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு பேரிடர் அழைப்பு வந்ததாக KAIA தெரிவித்துள்ளது.
விமானத்திற்கு தேவையான உதவிகளை வழங்க அனைத்து தயார்நிலையுடன் அவசர எண் 2 அறிவிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் உறுதிப்படுத்தியது. விமான நிலையத்தில் அவசரகால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை இயக்கப்பட்டு, உள்ளூர் நேரப்படி இரவு 8:40 மணிக்கு விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
மாற்று விமானதத்திற்கு ஏர் சீஷெல்ஸ் பணிபுரிந்து வருவதாகவும், அனைத்து 6 பணியாளர்களும் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டதாகவும் KAIA தெரிவித்துள்ளது. KAIA டெர்மினல் 1 இன் ஹோட்டலில் 128 பயணிகள் மற்றும் மூன்று குழந்தைகள் பாதுகாப்பாகத் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.