Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜசான் பள்ளியின் கவனக்குறைவு காரணமாக மாணவர் பலத்த மின்சாரக் காயத்திற்கு ஆளானதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜசான் பள்ளியின் கவனக்குறைவு காரணமாக மாணவர் பலத்த மின்சாரக் காயத்திற்கு ஆளானதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

167
0

தெற்கு ஜசான் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர் Sattam Fakieh உடற்கல்வியின் போது பள்ளி உடற்பயிற்சி கூடத்தில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, ஜசானில் உள்ள பிரின்ஸ் முஹம்மது பின் நாசர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து பள்ளி நிர்வாகம் குடும்பத்தினருக்கு தெரிவிக்க தவறியதாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் காலதாமதம் செய்ததாகவும், சரியான நேரத்தில் முதலுதவி மற்றும் சிறந்த சிகிச்சை வழங்குவதில் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக மாணவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குடும்ப ஆதாரங்களின்படி, பள்ளியின் உடற்பயிற்சி கூடத்தில் தனது உடற்கல்வி அமர்வில் கலந்துகொண்டபோது, ​​​​நீர் கசிவு காரணமாக அலமாரியில் குளிரூட்டியுடன் தொடர்பு கொண்ட மாணவர் மின்கசிவு காரணமாக மயங்கி விழுந்தார் எனவும், சில வாரங்களுக்கு முன்பு உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட மின்கசிவு குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், பள்ளியில் சுகாதார வழிகாட்டி இருந்தும் சிறுவனுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.

காயமடைந்த தமது மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஜசான் பகுதியின் பொதுக் கல்வித் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜா அல்-அட்டாஸ் கூறுகையில், மின்சார விபத்துக்கான சூழ்நிலைகள் மற்றும் அதன் காரணங்களை அவசரமாக ஆராய்ந்து தேவையான முடிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அப்பகுதி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!