சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பொதுப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. போக்குவரத்துத் துறை தனது “x” தளத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில், மிதிவண்டி ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தடையற்ற சாலைகளில் பயணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆடை மற்றும் மிதிவண்டிகளில் Reflectors என்ற பிரதிபலிப்பான்களை அணிவது, இரு கைகளாலும் சவாரி செய்வது, சாலையைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், போக்குவரத்து அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது, இரவில் பயணம் செய்யும் போது முன் மற்றும் பின் விளக்குகளைப் பொருத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.