ஜித்தாவில் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் தலைமையிலான அமைச்சரவை குழு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான சர்வதேச மையத்தை நிறுவியுள்ளது. மேலும் இதன் மூலம் சில முக்கிய ஒப்பந்தளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டன.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்கும், பயன்படுத்தப்படும் எரிசக்தி கலவையைப் பல்வகைப்படுத்துவதன் மூலமும், புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட சுத்தமான தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும் உமிழ்வைக் குறைப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாட்டின் பங்களிப்பை இது பாராட்டியது.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் ஆகியோர் சவூதிக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் ஆலோசனையை மேம்படுத்துவதற்கு பல மாநில தலைவர்களுடன் நடத்திய சமீபத்திய பேச்சுவார்த்தைகள்குறித்து அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) 18வது ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஜிசிசி-மத்திய ஆசிய உச்சிமாநாடு ஆகியவை சவூதி அரேபியாவின் தலைமையின் கீழ் நடைபெற்றதை அமைச்சரவை பாராட்டியது.
மேலும் அமைச்சரவை அமர்வைத் தொடர்ந்து சவூதி செய்தி நிறுவனத்திற்கு (SPA) அளித்த அறிக்கையில், தொழில் மற்றும் கனிம வளங்கள் அமைச்சரும், ஊடகத்துறையின் செயல் அமைச்சருமான பந்தர் அல்-கொராயேஃப், ஐநா வின் உயர்மட்ட அரசியல் மன்றம் 2023 இல் சவூதியின் சமீபத்திய பங்கேற்பை அமைச்சரவை மதிப்பாய்வு செய்ததாகக் கூறினார்.
ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கில் இஸ்லாத்திற்கு எதிரான தொடர்ச்சியான செயல்கள் உட்பட சமீபத்திய சர்வதேச முன்னேற்றங்களையும் மதிப்பாய்வு செய்து, இந்த இழிவான செயல்களுக்குச் சவூதியின் கடுமையான கண்டனத்தை மீண்டும் பதிவு செய்தது.
சவூதி அரேபியாவின் கலாச்சார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம், அல்ஜீரியாவின் கலாச்சாரம் மற்றும் கலை அமைச்சகம் மற்றும் ஈராக் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வூ ஒப்பந்தத்திற்கு இது அங்கீகாரம் அளித்தது.
சவூதி அரேபியாவின் ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே வரி மேலாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், விமான போக்குவரத்து சேவைகள் துறையில் சவுதி அரேபியா அரசுக்கும் பார்படாஸ் அரசுக்கும் இடையே ஒரு வரைவு ஒப்பந்தத்திற்கும் இது ஒப்புதல் அளித்தது.
வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் ஒத்துழைப்புக்காகச் சவுதி ஒலிபரப்பு ஆணையம் மற்றும் சீனா மீடியா குழுமத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும், தொழில்நுட்ப தொழிற்பயிற்சிக் கழகம் மற்றும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.