பொதுக் கல்வியில் மூன்று செமஸ்டர்களின் நன்மை தீமைகளை அளவிடுவதன் மூலம் கல்வி தரத்தினை மதிப்பீடு செய்ய உள்ளது கல்வி அமைச்சகம். திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முகமை மூலம், மூன்று செமஸ்டர்களின் செயலாக்கத்தை மதிப்பிடு செய்ய, ஒரு தொடர் மதிப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சகம் முயல்வதாக Okaz/Saudi Gazette தனக்கு கிடைத்த ஆதாரங்கள் மூலம் தெரிவித்துள்ளது.
சவூதி கவர்னரேட்டுகளில் உள்ள பொதுக் கல்வித் துறைகள், கல்வித் துறை அமைச்சகம், கல்வி இயக்குநர்கள், அலுவலக மேலாளர்கள் , உதவியாளர்களுடன் அமைச்சகம்
உரையாற்றியுள்ளது. மூன்று செமஸ்டர்களைப் பற்றிய மாதிரிகளைத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்குகிறது.
இந்த மாதிரி ஆனது மூன்று செமஸ்டர்களின் நன்மை தீமைகள், சவால்கள், பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கத்தை அளவிடுவது, 1443 மற்றும் 1444 AH இந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட அனைத்தையும் மதிப்பீடு செய்யும்.
இந்தக் கல்வியாண்டில் இரண்டு செமஸ்டர்களுக்குப் பதில் மூன்று செமஸ்டர்களாகப் பிரித்து, ஒவ்வொரு செமஸ்டருக்கும் 13 வாரங்கள் என்றும், மேலும் இந்த அமலாக்கம் ஹிஜ்ரி 1444 இல் செயல்பட தொடங்கியதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.