ஹனக் நகரத்தில் புதியாய் தொடங்கப்பட்ட செங்கடல் சர்வதேச விமான நிலையம் தன் முதல் விமானத்தைப் பெற்றது.
விஷன் 2030 திட்டத்தின் ரெட் சீ குளோபல் (RSG) திட்டத்தில்… வடமேற்கு சவூதி அரேபிய பகுதியான ஹனக்கில் புதிதாகத் தொடங்கப்பட்ட செங்கடல் சர்வதேச விமான நிலையம் (RSI) தன் முதல் விமான வருகையைக் கொண்டாடியது. தலைநகர் ரியாத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (RUH) புறபட்ட சவுதியா விமானம் ஹனக்கில் தரை இறங்கியது.
இந்த வான்வழி வழித்தடம் ரியாத் மற்றும் ஹனக் சவூதி நகரங்களை இரண்டு மணி நேரத்திற்குள் அடையலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு வியாழன் தோறும் காலை 10:50 மணிக்கு ரியாத்திலிருந்து விமானங்கள் புறப்பட்டு ஹனக் நகரத்திற்கும் அதே நாளில் மதியம் 1:35 மணிக்கு ஹனக் செங்கடல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுத் தலைநகர் ரியாத்திற்கும் திரும்பும் என்றும் இரண்டாவது சேவை ரியாத்திலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 12:50 மணிக்குப் புறப்படும் என்றும் விமானம் அதே சனிக்கிழமை மாலை 3:35 மணிக்கு ஹனக்கிலிருந்து ரியாத்திற்கு திரும்பும். வருகின்ற ஆண்டில் சர்வதேச விமானங்களை வரவேற்க ஹனக் செங்கடல் சர்வதேச விமான நிலையம் தயாராக உள்ளது.
செங்கடல் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடு டா (Daa) இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரெட் சீ குளோபல் திட்டத்தின் தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் செங்கடல் சர்வதேச விமான நிலையம் தன் பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டது.
ரெட் சீ குளோபல் உள்கட்டமைப்பு திட்டங்களிலும் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
760,000 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட ஐந்து சோலார் பண்ணைகளின் கட்டுமானமானது செங்கடலின் முதல் கட்டத்தை முழுவதுமாகச் சூரிய சக்தியால் இயங்கச் செய்யும். செங்கடல் 22 தீவுகள், 8,000 க்கும் மேற்பட்ட ஹோட்டல் அறைகள் மற்றும் ஆறு உள்நாட்டு தளங்களில் 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட 50 ஓய்வு விடுதிகளைக் கொண்டுள்ளது. இது நிலையான, உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாவின் புதிய சகாப்தத்திற்கான ரெட் சீ குளோபலின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த விமான நிலையம் தபூக் மற்றும் உம்முல்ஜ் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.