சூரிய ஒளியின் கீழ் வேலை செய்வதைத் தடைசெய்யும் முடிவின் மீது ஏதேனும் மீறல்கள் இருந்தால் அதை மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டின்(MHRSD)விண்ணப்பம் மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவைக்கான அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த எண்ணான 19911 மூலமாகவோ புகாரளிக்குமாறு MHRSD செய்தித் தொடர்பாளர் முகமது அல்-ரௌஸ்கி அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை, சூரிய ஒளியில் பணிபுரியத் தொழிலாளர்கள் தடை விதிக்கும் முடிவானது ஜூலை 15ம் தேதி அமல்படுத்தபட்டு செப்டம்பர் 15ம் தேதிவரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேசிய அளவியல் மையம் (NCM) வானிலை குறித்த தனது அறிக்கையில், கிழக்குப் பகுதி மற்றும் சவூதியின் மத்தியப் பகுதிகளில் உயர் வெப்பநிலை தாக்கம் தொடரும் என்றும், மக்காவின் சில பகுதிகளில் தூசி நிறைந்த காற்று, அதிகபட்ச வெப்பநிலையும், சிர் மற்றும் ஜிசான் பகுதிகள் மழை மேகங்களுடன் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.