சவூதி பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரிய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான அரபு நாட்டின் ஆசைகள் மீது நம்பிக்கை வைத்து, அரபு லீக் கவுன்சிலின் 32வது சாதாரண அமர்வில் கலந்துகொள்வதற்காக அரபு நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கடந்த வியாழன் அன்று ஜெட்டாவிற்கு வரத் தொடங்கினர்.
ஜெட்டா வந்தடைந்த தலைவர்களில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி, பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல்-கலீஃபா மற்றும் யேமன் ஜனாதிபதி தலைமைத்துவக் குழுவின் தலைவர் ரஷாத் முஹம்மது அல்- அலிமி ஆவார்கள்.
சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜித்தா நகருக்கு வருகை தந்த உயர்மட்ட அரபு பிரதிநிதிகளை வரவேற்று ,உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சூடான் நெருக்கடி, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் மற்றும் சிரியா நெருக்கடிகள்குறித்து முதன்மை தலைப்பாக விவாதித்தனர்.
உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சிரிய மோதல் வெடித்ததைத் தொடர்ந்து 2011 இல் அரபு லீக்கிலிருந்து தனது நாடு இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஜித்தா நகருக்குச் செல்வதாகச் சிரிய பிரசிடென்சி அறிவித்தது.வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்தாத் தலைமையிலான சிரிய தூதுக்குழு,கடந்த புதன்கிழமை முதல் வெளியுறவு அமைச்சர்களின் ஆயத்த கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வியாழன் அன்று அரபு வெளியுறவு மந்திரிகள் இரண்டாம் நாள் ஆயத்த அமர்வுகளை மீண்டும் தொடங்கி, உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலை இறுதி செய்து, சூடானில் அதன் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் போர் நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மேலும் நெருக்கடியை உள்விவகாரமாகக் கருத வேண்டும் என்ற வரைவுத் தீர்மானங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அஹ்மத் அபுல் கெயிட் தனது உரையில், அரபு லீக்கிற்கு சிரியா திரும்புவதை வரவேற்றதோடு, அரபு நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துவதற்கு ஈரான் மற்றும் துருக்கியிடமிருந்து சாதகமான அறிகுறிகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
அரபு லீக்கின் அறிவுரையின் கீழ் அரசியல் ஒருங்கிணைப்புக்களை உருவாக்குவதன் மூலம், பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், உள்ளூர் பாதுகாப்பு மற்றும் நிலைதன்மையை மேம்படுத்தவும், தங்கள் நாடுகளுக்கும் மக்களுக்கும் நல்வாழ்வை அடைவதற்கும் அரபு நாடுகள் வழிமுறைகளைக் கண்டறிய இது மிகவும் பயனளிப்பது குறிப்பிடத்தக்கது.