இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர், ஷேக் டாக்டர் அப்துல் லத்தீஃப் பின் அப்துல் அஜிஸ் அல்-ஷேக் அவர்கள் சவூதி அரேபியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதி பிரசங்கங்களுக்கு அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை அதாவது ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தின் 22 ஆம் நாளை அதாவது மே12 ஐ ஒதுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சூடானிய மக்களின் நிவாரணத்திற்கான இந்த வெள்ளிக்கிழமை சொற்பொழிவின் மூலம் நிதி திரட்டவும், இதற்கு உதவ நாடு முழுதும் உள்ள வழிபாட்டாளர்களை கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
சூடான் மக்களுக்கு உதவ அரசின் “சஹேம்” தளத்தின் மூலம் நன்கொடைகளை வழங்கலாம் என்றும் வலியுறுத்தியும் இதற்கான நற்கூலிகளை இம்மையிலும் மறுமையிலும் இறுவனிடத்தில் இருந்து கிடைக்கும் என்றும் மேலும் வழிபாட்டாளர்கள் தங்கள் சூடான் சகோதரர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நெருக்கடியான காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை திரும்பவும் பிரார்த்திக்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.