கடந்த செவ்வாயன்று சூடானுக்கு முதல் நிவாரண விமானத்தை இயக்கிய சவூதி அரேபியா, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் அதாவது KS Relief மூலம் சூடான் சர்வதேச விமான நிலையத்திற்கு ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 10 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்ட போர்ட் விமானம் புறப்பட்டது. இது இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவால் அனுப்பப்பட்டுள்ளது.
ராயல் கோர்ட்டின் ஆலோசகரும், கே.எஸ். நிவாரண மேற்பார்வையாளருமான டாக்டர் அப்துல்லா அல்-ரபீஹ் அவர்கள் ஒரு செய்திக் குறிப்பில் கடந்த செவ்வாய் அன்று தொடங்கிய இந்த நிவாரண சேவை, சூடான் மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவசர நிவாரணப் பொருட்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல் நிவாரண விமானமானது உணவு கூடைகள், தங்குமிடம் மற்றும் மருத்துவ பொருட்கள் உட்பட 10 டன் நிவாரணப் பொருட்களைக் எடுத்துச் சென்றது. சூடான் மக்களுக்குச் சவூதி வழங்கிய மனிதாபிமான உதவி சூடானில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைப் போக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக KSrelief செய்தித் தொடர்பாளர் Dr. Samer Al-Jutaili அவர்கள் கூறியுள்ளார்.
சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்குச் சவூதி அரேபியாவின் உன்னதமான பங்களிப்பினை இந்தச் செயல் பிரதிபலிக்கிறது.