சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதற்கான தனியார் துறையின் கோரிக்கைகள் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது மூன்றாம் காலண்டில் 80% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் இணக்கத்திற்கான தேசிய மையம் (NCEC)அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டதிலிருந்து அனுமதிகள் மற்றும் உரிமங்களுக்கான தொழில்நுட்ப தளம் கண்ட பெரும் வளர்ச்சியே இந்த அதிகரிப்புக்கான காரணம் என NCEC இன் செய்தித் தொடர்பாளர், Saad Al-Matrafi கூறினார்.
ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான வேகம் 79% அதிகரித்து 140 அனுமதிகளிலிருந்து சுமார் 657 அனுமதிகள் மற்றும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் செப்டம்பர் மாத அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான அனுமதிகள் ரியாத் (237), அதைத் தொடர்ந்து அல்-ஷர்கியா பகுதி (115), மக்கா (94), வடக்கு எல்லைகள் (90), மதீனா (48), தெற்குப் பகுதி (45) மற்றும் ஜிசான் (16) ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படுள்ளன.
சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவது, சவூதி நகரங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திப் பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த திட்டத்திற்குள் வருகிறது.





