சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை நடவடிக்கைகளை எடுக்கச் சவுதியின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நிர்வாக விதிமுறைகளில் அபராதங்களை சேர்க்க அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
புதிய விதிகளின்படி, நிலம் மற்றும் பிற சுற்றுச்சூழல் இடங்களைச் சேதப்படுத்துபவர்கள் பொது வழக்குக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பாகத் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10,000 ரியால்கள் முதல் ஒரு லட்சம் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மறுவாழ்வு திட்டத்திற்கு இணங்கத் தவறினால், மீறலுக்கு 15,000 ரியால்கால் முதல் ஒரு லட்சம் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் மறுவாழ்வுத் திட்டம் அல்லது அசுத்தமான இடங்களை மறுசீரமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறினால் 15,000 ரியால்கள் முதல் ஒரு லட்சம் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
புதிய விதிகள் சேதமடைந்த இடங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சுற்றுச்சூழல் இணக்கத்திற்கான தேசிய மையம், மறுவாழ்வு தேவைப்படும் சேதமடைந்த, அசுத்தமான தளங்களைப் பட்டியலிட வேலை செய்கிறது. புதிய விதிமுறைகளின்படி மீறல்களை விசாரிக்கவும், கண்காணிக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும், மீறுபவர்களைப் பிடிக்க விசாரணை நடத்தவும் உள்துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்கிறது.