சவூதி தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம், தொழில்துறை வசதிகளுக்கு வழங்கப்படும் சுங்க விலக்கு சேவையைப் பெறுவதற்கு தேவையான நேரம் 48 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
தொழில்துறை முதலீட்டாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கத்துடன், SENAEI தளத்தின் மூலம் வழங்கப்படும் சுங்க வரி விலக்கு சேவையானது, விலக்கு பெற தகுதியான அனைத்து பொருட்களையும் உள்ளடக்கியதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்துறை உரிமத்தின் நன்மைகளில் ஒன்றாக, தொழில்துறை முதலீட்டாளருக்குத் தொழிற்சாலை வசதிக்கான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றில் விலக்கு பெறவும் இந்தத் தளம் உதவுகிறது.
வரி விலக்கு பெற எடுக்கும் நேரத்தை 10 நாட்களிலிருந்து 48 மணிநேரமாக இச்சேவை குறைக்க உதவுவதால், தொழில்துறை உரிமத் தரவுகளில் வரி விலக்கு தேவைப்படும் பொருட்களை உள்ளிட வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுங்க விலக்கு சேவையைப் பெற விரும்புவோர் (https://industry.sa/ar/home) என்ற இணைப்பின் மூலம் SENAEI தளத்தில் பெறலாம்.