சவூதி அரேபியா முழுவதும் பல்வேறு கவர்னரேட்டுகளில் உள்ள கல்வித் துறைகள், புதிய கல்வியாண்டில் முதல் செமஸ்டரின் இரண்டாம் பகுதியில் சீன மொழி கற்பிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் பொது மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை நிறைவு செய்துள்ளன.
சீன மொழியைக் கற்பித்தல், புதிய படிப்புகள், பட்டமளிப்புத் திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட துறை, தேர்ச்சி வகுப்புகளுக்கான வழிகாட்டுதல், கலப்பினக் கல்வி மற்றும் தன்னார்வத் தொண்டு போன்றவற்றை உள்ளடக்கிய அமைப்பின் மூன்றாம் கட்ட பயன்பாட்டின் ஒரு பகுதியாக இது உள்ளது.
கல்வித் துறைகளுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டியின் படி, சீன மொழித் திட்டத்தைச் செயல்படுத்த, கல்வித் துறைகள் முழு செமஸ்டரிலும் வாரத்திற்கு ஒரு வகுப்பை ஒதுக்கி, அதைச் சுய கற்றல் மாணவர்களுக்காக நியமிக்கப்பட்ட உதவியாளருக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
கல்விக் கண்காணிப்புத் துறையின் அறிவிப்பைச் செயல்படுத்த விருப்பம் இருந்தால், எஞ்சிய பள்ளிகள் தகுதியான வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க அல்லது திட்டத்தைச் செயற்படுத்த வாய்ப்பு உள்ளது.கிழக்கு மாகாணத்தில் அல்-அஹ்ஸா கல்வித் துறையில் ஆண் மற்றும் பெண் மாணவர்களின் இலக்கு சுமார் 2950 மாணவர்களாவர், இதில் எட்டு பாடசாலைகளில் 1415 ஆண் மாணவர்களும் 10 பாடசாலைகளில் 1534 பெண் மாணவர்களும் அடங்குவர்.
கல்வித் துறைகள் தங்கள் கல்விக் கண்காணிப்பில் ஆண் மற்றும் பெண் மாணவர்களின் தன்னார்வ வேலை நேரத்தைக் கண்காணிப்பதில் முக்கித்துவம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.
கலப்பு அல்லது கலப்பினக் கல்வியைப் பொறுத்தவரை, பள்ளிகள் ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலப்பினக் கல்விக்கு விண்ணப்பிக்கவும், மேலும் இது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட துறையானது டிஜிட்டல் வடிவமைப்பு, நிர்வாகத் திறன், நிலையான வளர்ச்சி, சீன மொழி, இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, முதலுதவி, பேஷன் டிசைன், சுற்றுலா மற்றும் ஹோட்டல், ரோபாட்டிக்ஸ், மொழி (அரபு), குர்ஆன் மற்றும் அதன் அறிவியல் ஆகியவற்றில் ஒரு பகுதியாக இருக்கும் என வழிகாட்டிச் சுட்டிகாட்டியுள்ளது.
தேர்ந்தடுக்கப்பட்ட துறை மூன்று செமஸ்டர்களுக்கு மேல் நீட்டிக்கப்படும் ஒரு பாடம் என்றும், கடைசி செமஸ்டரில் மாணவர் பட்டப்படிப்புத் திட்டத்தைச் சமர்ப்பித்து கல்வி அட்டவணையில் அவரது வகுப்புகள் தொடர்ச்சியாகவும், இரண்டு தொடர்ச்சியான வகுப்புகளுக்கு மேல் இருக்க கூடாது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.