சவூதி அரேபியாவின் கைத்தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பந்தர் அல் குரேயப் அவர்கள், சீன நகரமான யின்க்சுவானில் செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய 6வது சீன-அரபு கண்காட்சிக்குத் தலைமை வகித்தார்.
இக் கண்காட்சியில் சவூதி பெவிலியனை சவூதி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கண்காட்சிக்கு கௌரவ விருந்தினராகச் சவூதி அரேபியா தெரிவு செய்யப்பட்டமை இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. சவூதி அரேபியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எண்ணெய் அல்லாத வர்த்தக இருப்பு 2022 ஆம் ஆண்டளவில் 110 பில்லியன் ரியால்களை எட்டியுள்ளது. சீனாவிற்கான சவூதி ஏற்றுமதி 37 பில்லியன் ரியால்கள் மற்றும் சீனாவின் இறக்குமதி 147 பில்லியன் ரியால்கள் ஆகும்.
தொழில்துறை மற்றும் சுரங்கத் துறைகளில் பெய்ஜிங்குடன் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்தத் தொழில் மற்றும் கனிம வள அமைச்சர் சமீபத்தில் சீனாவில் எட்டு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். சவூதி தூதுக்குழுவில் பல அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளன.