சபாநாயகர் ஷேக் அப்துல்லா அல்-ஷேக் தலைமையில் கடந்த திங்களன்று நடைபெற்ற 46வது வழக்கமான அமர்வின் போது சவுதி ஷோரா கவுன்சில் அதன் சிறப்புக் குழுக்களின் மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளது.
ஷோரா எட்டாவது பதவிக்காலத்தின் மூன்றாம் ஆண்டுக்கான ஒவ்வொரு குழுவின் தலைவர், துணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, ஒவ்வொரு ஆண்டும் பணியின் தொடக்கத்தில் மறுசீரமைக்கப்பட்ட சிறப்புக் குழுக்களின் உறுப்பினர்கள், அவற்றின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் இஸ்லாமிய மற்றும் நீதி விவகாரக் குழு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் குழு, ஆற்றல் மற்றும் தொழில் குழு, பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரக் குழு, வெளியுறவுக் குழு, மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழு, கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி குழு, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா குழு, ஊடக குழு, நிதி மற்றும் பொருளாதார விவகாரக் குழு, சுகாதார குழு, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழு, மனித உரிமைகள் குழு, ஹஜ், வீட்டுவசதி மற்றும் சேவைகள் குழு, நீர், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் குழு ஆகிய குழுக்களுக்கு முறையே தனித்தனி தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.