2030ன் தொலைநோக்கு பார்வை மூலம், உலகின் போட்டித்தன்மை வாய்ந்த நாடுகளில் சவூதி அரேபியா பொருளாதார வெற்றியை நிலைநிறுத்தியுள்ளதாகச் சவூதி தரநிலைகள், அளவியல் மற்றும் தர அமைப்பின் (SASO) ஆளுநர் டாக்டர் சாத் பின் ஒத்மான் அல்-கசாபி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நடைபெற்ற சவூதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான மதிப்பீட்டு நடைமுறைகள்குறித்த கலந்தாய்வின்போது இதனைத் தெரிவித்தார்.
130 ஐரோப்பிய யூனியன் தொழிற்சாலைகளிலிருந்து 41,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் உள்ளூர் சவூதி சந்தைகளில் உள்ளது, இவை அனைத்தும் தரமான சான்றிதழ்கள் பெற்றுள்தாக டாக்டர் அல்-கசாபி எடுத்துரைத்தார்.
ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் சவூதி தயாரிப்பு மாடல்களில் 63% பூர்த்தி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2022ல் 82.7 % உயர்ந்துள்ள சவூதி சந்தையின் தரத்திற்கு ஏற்பப் பொருட்களின் அதிகரிப்பு குறித்து கவர்னர் தெரிவித்தார்.
சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கி, உள்ளூர் சந்தைகளில் தயாரிப்புகளுக்கான தரம் மற்றும் பாதுகாப்பு நிலைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, SASO உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் ஈடுபட இந்தப் பட்டறை அனுமதித்தது. ஜெர்மனியில் உள்ள சவூதி அரேபிய வர்த்தக இணைப்பாளர் Soliman Alhumeidan, ஜெர்மன்-சவூதி அரேபிய பொருளாதார விவகாரங்களுக்கான தொடர்பு அலுவலகத்தின் (GESALO) பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சவூதி தயாரிப்பு பாதுகாப்பு திட்டம் (SALEEM) பற்றிய அறிமுகத்தை இந்தப் பட்டறை உள்ளடக்கியது. சாபர் எலக்ட்ரானிக் தளம், சவூதி தரக் குறி மற்றும் இணக்கச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடைமுறைகள் உட்பட SASO வழங்கும் முக்கிய சேவைகளை முன்னிலைப்படுத்தியது.
உலக வர்த்தக அமைப்பால் (WTO) நிர்வகிக்கப்படும் வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள் (TBT) உடன்படிக்கைக்கு ஏற்ப அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றது.
ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய SASO பிரதிநிதிகள் குழு நடத்திய ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தப் பட்டறை இருந்தது. ஐரோப்பியர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் தர நிலைகளை மேம்படுத்தக் கூட்டாண்மைகளை உருவாக்குவதே இச்சுற்றுப்பயணத்தின் நோக்கமாகும்.