சவூதி விமான நிலையங்கள் ஒன்றில் சவூதி ரியால் 500000 பணத்தை கடத்த முயன்ற ஆசிய நாட்டவரின் முயற்சியைப் பொது வழக்கு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
வெளிநாட்டவர் விமான நிலையம் ஒன்றின் வழியாகச் சவூதியை விட்டு வெளியேற முயன்றபோது, ஒரு பையில் ரகசிய முறையில் பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைப் பொது வழக்கறிஞரின் பொருளாதார குற்றப்பிரிவு முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாட்டின் நிதி மற்றும் பொருளாதார பாதுகாப்பை பாதிக்கும் விதிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறுபவருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை வழங்கப் பொது வழக்குரைஞர் பிரிவு தயங்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.