ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை 6 மற்றும் 5.50 சதவீதம் முறையே 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த சவூதி மத்திய வங்கி (SAMA) முடிவு செய்துள்ளது.
சவூதி அரேபிய மத்திய வங்கியின் இந்த முடிவுகள் பண ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான கட்டளைக்கு ஏற்ப உள்ளது.மேலும் முக்கிய வட்டி விகிதங்களில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கால் புள்ளி உயர்வை அறிவித்துள்ளது. இது ஃபெடரல் நிதி விகிதத்தை 5.25% முதல் 5.5% வரை தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.