சுற்றுச்சூழல் ஆய்வுத் துறையில் கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் சவூதி பெண்களின் பங்கேற்பு விகிதம் 360 சதவிகிதத்திற்கும் மேலாகவும், ஆண் ஆய்வாளர்களின் பங்கேற்பு விகிதம் 10 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் இணக்கத்திற்கான தேசிய மையத்தின் அறிக்கையின்படி, சவுதி பெண்கள் இந்த ஆண்டு சுற்றுச்சூழல் ஆய்வுகளில் தாங்கள் சிறந்து விளங்குவதை நிரூபித்து நடப்பு ஆண்டில் மொத்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 263 ல் பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்து 111 ஆக உள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சவூதி விஷன் 2030 இன் இலக்குகளின் கீழ் சுற்றுச்சூழல் துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் போன்ற கல்வித் தகுதிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, இந்த முக்கியமான துறையில் வேலைவாய்ப்புக்கான அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப அவர்கள் தேர்வு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சியைப் பெண் ஆய்வாளர்கள் பெறுவதாக மையம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.