சவூதி அரேபியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தின் அளவு 2022 ஆம் ஆண்டில் சவூதி ரியால் 80.7 பில்லியனை எட்டியுள்ளது என்று வர்த்தக அமைச்சர் மஜீத் அல்-கசாபி கூறினார்.
மேலும் இரண்டு ஆண்டுகளில் சவூதி அரேபியாவில் பிரிட்டனின் முதலீடுகளின் அளவு SR26.5 பில்லியன் (பவுண்டுகள்) என்று அல்-கசாபி கூறினார். “சவுதி அரேபியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான இலக்குகளை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்,” என்று கூறிய அவர், கடந்த ஆண்டு பிரிட்டனுக்கான சவுதி ஏற்றுமதியின் வளர்ச்சி 130 சதவீதமாக இருந்தது என்பதையும் தெரிவித்தார்.
165 பிரிட்டன் முதலீட்டாளர்கள் தற்போது சவூதி அரேபியாவில் உள்ளதாகவும், சுமார் 14,000 இளம் சவூதியர்கள் பிரிட்டனில் கல்வி கற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். “நாங்கள் பல்வேறு நிகழ்வுகளில் பிரிட்டிஷ் தரப்பைச் சந்தித்தோம், சேவைத் துறையில் பிரிட்டிஷ் நிபுணத்துவத்தைப் பெற நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்றும், இரு தரப்புக்கும் இடையே பெரும் முதலீட்டு வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் தெரிய்படுத்தினார் . புதுமையான துறைகளில் முதலீட்டை அதிகரிப்பதில் சவுதி அரேபியா ஆர்வமாக உள்ளது, புத்தாக்கத் துறைகளில் முதலீட்டாளர்களையும் நிறுவனங்களையும் ஈர்ப்பதை சவூதி அரேபியா நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அல்-கசாபி கூறினார்.
சவூதி விஷன் 2030 செயல்படுத்தல் தொடங்கப்பட்டதில் இருந்தே சவூதி மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான வர்த்தகம், நிதி, தொழில்முறை சேவைகள், தூய்மையான ஆற்றல், கல்வி, சுகாதாரம் மற்றும் ஆக்கப்பூர்வமான தொழில்களில் மிகப் பெரும் முன்னேற்றம் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.