சவூதி அரேபியாவின் தொழில்துறையில் உள்ள வாய்ப்புகள் பெரிய முதலீடுகளுக்கு மட்டும் அல்ல என்று தொழில் மற்றும் கனிம வள அமைச்சர் பன்தார் அல்கோரா கைத்தொழில் துறையில் முதலீடுகளைத் துரிதப்படுத்தும் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்து, இந்தத் திட்டம் அனைத்து வகை முதலீட்டாளர்களுடனும் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று உறுதிப்படுத்தினார்.
முதலீட்டாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்றப் பொருத்தமான முடிவுகளைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட துறைகளில் தரமான முதலீடுகளைச் செய்வதற்கு முதலீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தொழில்துறைக்கான தேசிய முக்கிய நோக்கங்களை அடைய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சகம் தொழில்துறை வணிகத்தின் இணைப்பை அறிமுகப்படுத்தி 600 விண்ணப்பதாரர்களைப் பெற்று அவற்றில் 15 திட்டங்கள் தேர்வு செய்து, அடுத்த வாரம் முதல் வணிக செய்முறையில் பயன்படுத்தப்படும் என்றும், மேலும் அமைச்சகம் பல முதலீட்டாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுடன் பல திட்டங்களில் பணிபுரிந்து சுமார் 160 வாய்ப்புகளை உருவாக்கி அவற்றில் 70 திட்டங்கள் கடந்த திங்களன்று தொடங்கப்பட்டதாக அல்கோரே சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு முதலீட்டாளரும் தொழில் மற்றும் கனிம வள அமைச்சகத்தின் அனைத்து ஆதரவையும் அதிகாரத்தையும் பெறுவார்கள் என்றும் அல்கோரே தெளிவுப்படுத்தினார்.