தேசிய தொல்பொருட்கள் பதிவேட்டில் 70 புதிய தொல்பொருள் தளங்களை ஆவணப்படுத்தச் சவூதி பாரம்பரிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட தொல்பொருள் மற்றும் வரலாற்று தளங்களின் எண்ணிக்கை 8,917 ஆக உயர்ந்துள்ளது.
பதிவேட்டில் உள்ள ஆவணங்கள், தளத்தின் கண்டுபிடிப்பில் தொடங்கி, அதன் மதிப்பைச் சரிபார்க்க தொல்லியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டு தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளைத் தயாரித்து எழுதுவதன் மூலம் முடிவடைகிறது.
தெற்கு ஆசிர் பிராந்தியம் 14,அல்-ஜுஃப் 13, ஹைல் 12, ஜசான் 11, அல்-காசிம் 7, மதீனா 6, அத்துடன் ரியாத்தில் இரண்டு தளங்கள், கிழக்கு மாகாணம் மற்றும் மக்காவில் தலா ஒன்றும் புதிதாகக் கண்டுப்பிடிக்கப்பட்ட தளங்களில் உள்ளது.
“பலாக்” தளம் மற்றும் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கு மூலம் ஆய்வு செய்யப்பட்ட தொல்பொருள் தளங்களைப் புகாரளிக்க குடிமக்கள், வெளிநாட்டினர் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து நபர்களுக்கும் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.





