சவூதி அரேபிய துறைமுகங்களின் வரலாற்றில் MSC Loreto என்ற மிகப்பெரிய கொள்கலன் கப்பல் ஜித்தா இஸ்லாமிய துறைமுகத்திற்கு வரவுள்ளதாக சவுதி துறைமுக ஆணையம் (MAWANI) அறிவித்துள்ளது.
MSC Loreto கொள்கலன் கப்பல் 400 மீட்டர் நீளம், 61.3 மீட்டர் அகலம், 33 மீட்டருக்கும் அதிகமான ஆழம், 24,000 சதுர மீட்டர் பரப்பளவு,17 மீட்டர் வரைவு திறன் மற்றும் 24,346 நிலையான கொள்கலன்கள் கொண்டது என்று MAWANI விளக்கியுள்ளது, ஜித்தாவில் மட்டுமின்றி மற்றைய சவுதி அரேபிய துறைமுகங்களிலும் நிறுத்தப்படும் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இதுவாகும்.
MSC Loreto, மூலப்பொருட்களிலிருந்து இயந்திரங்கள், பிளாஸ்டிக், ரப்பர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மரச்சாமான்கள் போன்ற நிறைவுபெற்ற தயாரிப்புகள் வரை பரந்த அளவிலான பொருட்களைக் கொண்டு செல்கிறது.
துறைமுக வளர்ச்சி நடவடிக்கைகளில் கொள்கலன் நிலையங்களின் கொள்ளளவை 70% க்கும் அதிகமாக அதிகரித்து 2030 ஆம் ஆண்டளவில் 13 மில்லியன் கொள்கலன்களை இது எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடல்வழி வர்த்தகம், கொள்கலன்கள் மற்றும் பொருட்களின் பரிமாற்றத்தில் செங்கடல் கடற்கரையில் முதல் துறைமுகமாக இருப்பதால், MSC Loreto ஜித்தா இஸ்லாமிய துறைமுகத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பது அங்குள்ள சக்திவாய்ந்த வணிக இயக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
மேலும் இது சவூதி அரேபியாவிற்கும் உலகிற்கும் இடையிலான செயல்பாட்டுத் திறன் மற்றும் வழிசெலுத்தல் இணைப்பை மேம்படுத்தி, போக்குவரத்து மற்றும் தளவாட சேவைகளுக்கான தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப மூன்று கண்டங்களை இணைக்கும் உலகளாவிய தளவாட மையமாகச் சவூதியின் நிலையை உறுதிப்படுத்துகிறது.
ஜித்தா இஸ்லாமிய துறைமுகத்தால் பெறப்பட்ட இந்த மிகப்பெரிய கொள்கலன் கப்பல் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திரவ இயற்கை எரிவாயுவில் (LNG) இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.