செங்கடல் துறைமுகமான துபா வழியாகத் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்ட இயந்திரங்களின் துவாரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் 460,000 கேப்டகன் மாத்திரைகளைக் கடத்த நடந்த முயற்சியைச் சவூதி அதிகாரிகள் முறியடித்துள்ளதாக ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் அதன்படி, இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.