
ஒன்பதாவது சவூதி திரைப்பட விழா தஹ்ரானில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் உலக கலாச்சார மையத்தில் (இத்ரா) உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்பட மற்றும் ஊடக வல்லுநர்களுடன் சிவப்பு கம்பளத்தில் நடைபயிற்சி தொடங்கியது.
சவூதி நடிகை ரீம் அல்-ஹபீப் அரப் நியூஸிடம் கூறுகையில், ஒரு இளம் பெண்ணாக கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத வாழ்க்கையை நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டேன், முடி இளவரசர் முகமது பின் சல்மான் என்னை இந்த தருணத்தில் வாழ வைத்தார் என்று மெயிசிலிர்போடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விழாவில் “கப்ரீத்” திரைப்படத்தை திரையிடும் இயக்குனர் சல்மா முராத்,படம் உண்மையானது,நான் எனது சவுதி சகோதர சகோதரிகளுடன் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும்,குறிப்பாக இந்த விழா அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்களையும் மிகவும் சாதகமாக ஊக்குவிக்கிறது என்று கூறினார்.
சிவப்பு கம்பளத்திற்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் இத்ராவின் சினிமா ஹாலுக்குச் சென்றனர், அங்கு சவூதி தயாரிப்பாளர் சலா அல்-ஃபவ்ஸான் – ஷாமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் மற்றும் எண்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து 34 திரைப்படங்களைத் தயாரித்தவர் – மற்றும் பஹ்ரைன் திரைக்கதை எழுத்தாளர் அமின் சலே ஆகியோர் சினிமாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக விழாவால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு விழாவின் விருதுகளை வென்றவர்கள் மே 11 அன்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு SR1.5 மில்லியனுக்கும் அதிகமான ($400,000) மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்.