Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி தமிழ் கலாச்சாரமையத்தின் கோடை கொண்டாட்டம் தமிழர்கள் ஒன்றுகூடல் திருவிழா.

சவூதி தமிழ் கலாச்சாரமையத்தின் கோடை கொண்டாட்டம் தமிழர்கள் ஒன்றுகூடல் திருவிழா.

301
0

சவூதி தமிழ் கலாச்சார மையம் ஜூன் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் அல்கோபர் நகரில் Signature ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் கோடை கொண்டாட்டம் எனும் சிறப்புமிகு நிகழ்ச்சியை நடத்தியது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர் பர்வீன் சுல்தானா அவர்கள் இந்தியாவிலிருந்து வந்து கலந்து கொண்டார்.

கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியைச் சவுதி அரேபியாவின் முன்னணி நிறுவனம் யுனிவர்சல் இன்ஸ்பெக்ஷன் கம்பெனி பெருமையுடன் வழங்கியது. UIC நிறுவனத்துடன் இணைந்து தம்மாம் மதுரா உணவகம் மற்றும் Y.A.J வீட்டு உபயோக வணிக நிறுவனம் இந்நிகழ்ச்சியை வழங்கினார்கள்

கோடைகொண்டாட்டம் நிகழ்ச்சியை அதன் சவூதி அரேபிய ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லா மற்றும் நூஹ் ஒருங்கிணைத்தனர்.

நெல்சனின் சவுதி இசைத்தமிழ் குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினர். அதனைத்தொடர்ந்து ஆசிரியை பரீதா தலைமையில் கலந்து கொண்ட தம்மாம் இந்திய பன்னாட்டு பள்ளியின் மாணவர்கள் சிறப்பாக ஆடல் பாடல் நடனம் நாடகம் உள்ளிட்டவற்றை அரங்கேற்றிப் பார்வையாளர்களைக் கவர்ந்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் சமர்ப்பனா கர்னாடிக் அகாடமியின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்திய கலாச்சார பாட்டுக்களையும் செம்மொழியா தமிழ் மொழி பாடலையும் பாடி வந்திருந்த தமிழ் மக்களை உற்சாக வெள்ளத்தில் கடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட ஜெயகாந்தன் மற்றும் ஜூலியஸ் போன்றோர் பாட்டு பாடி வந்திருந்த தமிழ் மக்களை மகிழ்வித்தனர்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் TR பாலு அவர்களின் பாதைமாறப் பயணம் நூலைச் சவூதி அரேபியாவில் முதல்முறையாக டாக்டர் பர்வீன் சுல்தான வெளியிட அதனைப் பக்ரைனிலிருந்து வந்திருந்த மன்னை முபாரக் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அல்கோபார் சொல்வேந்தர்கள் மன்றத்தின் உறுப்பினர் MK மீரான் எழுதிய நீங்க நினைவுகள் கவிதை தொகுப்பை முனைவர் பர்வீன் சுல்தானா வெளியிட அதன் நூலாசிரியர் மீரான் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட ஜெயகாந்தன் மற்றும் ஜூலியஸ் போன்றோர் பாட்டு பாடி வந்திருந்த தமிழ் மக்களை மகிழ்வித்தனர்.

சவூதி தமிழ் மக்களின் மனிதநேயப்பண்பாளராக விளங்கும் திரு பத்ருத்தீன் அப்துல் மஜீத் அவர்கள் இந்நிகழ்ச்சியை தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார்.

NRTIA கமால்பாட்ஷா, அல்கோபார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத்தின் தலைவர் மோகன்தாஸ், தம்மாம் முத்தமிழ் மன்றத்தின் சிவா போன்றோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் வெங்கடேஷ் கலியப்பெருமாள், ஆரிப் மக்பூல், காமால் பாட்சா, அல்கோபார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத்தின் தலைவர் மோகன்தாஸ், தம்மாம் முத்தமிழ் மன்றத்தின் தலைவர் சுந்தர், ஆட்ச்சிமன்ற குழுத் தலைவர் சிவா, பக்ரைன் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் அப்துல் கையூம், பக்ரைன் மின்னும் மன்னை தலைவர் மன்னை முபாரக், உள்ளிட்ட 700 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாபெரும் சிறப்புமிகு கோடை கொண்டாட்டம் தமிழர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியைப் பக்ரைன் பாரதி தமிழ் சங்கத்தின் துனைத் தலைவர் வல்லம் பசீர் அதனது காந்தக் குரலில் தொகுத்து வழங்கினார்.

நூஹ் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!