சிவகங்கை மாவட்டம், திருமன்சோலையைச் சேர்ந்த 45 வயதுடைய செல்வம் என்பவர் கடந்த மே மாதம் 12 ஆம் தேதி மாரடைப்பால் ஜீசான் மாகாணத்தில் உள்ள மருத்துவமணையில் மரணமடைந்து விட்டார்.
ஜித்தாவில் வசிக்கின்ற சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சவூதி திமுக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சேலம் இஸ்மாயில் செரீப் அவர்களைத் தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு ரியாத் NRTIA பொறுப்பாளர் சந்தோஷ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
அதன்பின் தாயகத்தில் உள்ள இறந்தவரின் உறவினர்களுடன் தொலைபேசிமூலம் அவர்களுக்குத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்து ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி இறந்தவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு உதவியாகவும் இறந்தவரின் முதலாளியிடம் பேசி நிலுவைத்தொகையினை இறந்தவரின் குடும்த்தினருக்கு பெற்றும் கொடுத்தார் சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சேலம் இஸ்மாயில் செரீப்.
அதற்குப் பின் இறந்த செல்வத்தின் உடலைத் தாயகம் அனுப்பக்கோரி குடும்பத்தினர் விண்ணப்பம் வைத்ததை தொடர்ந்து இறந்தவரின் உறவினர் அரவிந்த சாமி அவர்களுக்கு Power of autonomy வழங்கப்பட்டது பின் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர முயற்சி செய்து சேலம் இஸ்மாயில் ஜூலை 9ம் தேதி அன்று நேரடியாக ஜித்தாவிலிருந்து ஜீசான் சென்று இறந்தவரின் உறவினர் அரவிந்தசாமியுடன் இணைந்து அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்தி இறந்தவரின் உடல் ஜித்தாவிலிருந்து பக்ரைன் வழியாகக் கல்ப் ஏர்லைன்ஸ் விமானம்மூலம் உடல் தாயகத்திற்கு அனுப்பப்பட்டது.
ஜூலை 14ம் தேதி சென்னை விமான நிலையத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே நவாஸ்கனி அவர்களின் உதவியாளர்கள் ரவூப், அரபாத் துரிதமாகச் செயல்பட்டு பூத உடலைக் கார்கோ கிளியரன்ஸ் செய்து இறந்தவரின் குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர்.
மேலும் சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சேலம் இஸ்மாயில் சென்னையில் உள்ள சமூக ஆர்வலர் ஜின்னாவின் உதவியுடன் விமான நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் அரசனூர் வரை பூத உடலை எடுத்துச்செல்லத் தமிழக அரசின் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது .
இந்த மாபெரும் மனிதநேய செயல்களைச் செய்த சவூதி தமிழ் கலாச்சார மையம் மற்றும் திமுக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சேலம் இஸ்மாயில் செரிப் அவர்களுக்கு இறந்த செல்வத்தின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.